இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது? புதிய ஆய்வில் தகவல்

பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிக்கேடியான் ரிதமே காரணம். ஆனால், நமது உடல் அசைவுகள் செயல்படும் விதத்தில் அது பெரிய அளவில் மாற்றங்களை செய்யும் வல்லமை கொண்டுள்ளது. .

லேன்செட் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், காலைப் பொழுதில் செய்வதை விட, பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலையில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சோர்வடைவதால் இந்த வேறுபாடு ஏற்படவில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இதய வால்வை மாற்றுவது உள்பட அறுவை சிகிச்சை செய்யும்போது இதய செயல்பாட்டை மருத்துவர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதய திசுவுக்கு செல்லும் பிராண வாயுவின் வரத்து குறைவதால் உறுப்பு அழுத்தத்துக்கு உள்ளாகலாம்.

நெஞ்சு வலி, இதய அல்லது சிகிச்சைக்குப் பிந்தைய மரணம் உள்பட பல்வேறு சிக்கல்கள் குறித்து மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்ததில் அவர்களுக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது.

  • 298 காலை நோயாளிகளில் 54 பேருக்கு பாதகமான நிகழ்வுகள் பதிவாகின.
  • 298 பிற்பகல் நோயாளிகளில் 28 பேருக்கு பாதகமான நிகழ்வுகள் பதிவாகின.
  • பிற்பகல் நோயாளிகளுக்கு பாதி அளவே சிக்கல்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு இருந்தது.
  • பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒவ்வொரு 11 நோயாளிகளுக்கும் ஒரு முக்கியமான நிகழ்வை தவிர்க்கலாம்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேஸ்ச்சர் டிலில்லே ஆராய்ச்சி மைய பேராசிரியர் பார்ட் ஸ்டேல்ஸ், பிபிசி செய்தி இணையதளத்திடம் கூறுகையில், “அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் இருந்து மக்களை அச்சுறுத்த நாங்கள் விரும்பவில்லை. இது உயிரைக் காக்கும் நோக்கம் கொண்டது,” என்றார்.

“மதிய உணவுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வது மருத்துவமனைகளுக்கு முடியாமல் போகலாம்,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால் பேராசிரியர் ஸ்டேல்ஸ் மேலும் கூறுகையில், “அதிக பாதிப்புகள் நிறைந்த நோயாளிகளை நம்மால் கண்டறிய முடியுமானால், பிற்பகலில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்துவதால் அவர்கள் நிச்சயம் பலன் பெறுவர். அது நியாயமாகவும் இருக்கலாம்,” என்றார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் பருமன் மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பாதிப்புகளின் தன்மை அதிகரிப்பதையும் பார்க்க முடிகிறது.

இதய சுகாதாரம் என்பது ஒரு நாள் பொழுதில் ஏற்றத்துடன் கூடியதாக இருக்கும் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான்.

காலைப்பொழுதில் இதய வலி அல்லது மாரடைப்பு அதிகமாக நிகழக்கூடியது. அதேவேளை இதயத்துடிப்பும் நுரையீரல் செயல்பாடும் பிற்பகலில் மிகத் தீவிரமாக இருக்கும்.

“மூலக்கூற்று உயிரியலுக்கான பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவர் ஜான் ஓ நீல் கூறுகையில், அறிவியல் ரீதியாக இது பெரிய ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. ஏனென்றால், உடலில் உள்ள மற்ற அணுக்களை போல, சிர்காடியம் இசைவும் இதயத்துடிப்பின் செயல்பாடுக்குத் தக்கபடி இயங்குகிறது,” என்றார்.

“நமது ரத்த நாடி முறை, நண்பகல், பிற்பகலுக்குப் பிந்தைய செயல்பாட்டில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. தொழில்முறை தடகள வீரர்கள் வழக்கமாக தங்களின் சாதனைளுக்கான நேரத்தை இந்த வேளையிலேயே மேற்கொண்டு சிறந்த செயல்திறனை நிரூபிக்கின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.

“மற்ற சாத்தியம் மிக்க விளக்கங்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்கள் காலை பொழுதிலே தங்களின் சொந்த உடல் கடிகாரத்தின் செயல்திறன் அல்லது அறுவை சிகிச்சைக்கான திறன் குறைவாக இருப்பதால் சோர்வுடன் இருக்கலாம், குறிப்பாக, அவர்கள் காலையில் வேலை செய்யும் பழக்கம் அல்லாதவர்களாக இருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது,” என்று டாக்டர் ஜான் ஓ நீல் கூறுகிறார்.

ஆனால், இன்னும் ஆழமாக ஆய்வு செய்துள்ள பேராசிரியர் ஸ்டேல்ஸ், இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தவர்களின் விகிதம், மருத்துவர்கள் சோர்வடைவதால் சரிவடைவதில்லை என்று கூறுகிறார்.

இதய திசுவின் மாதிரிகளை நோயாகளிடம் இருந்து பிரெஞ்சு குழு நடத்திய சோதனை, பிற்பகல் பொழுதில் மிகவும் சரியான வகையில் இதயம் துடிப்பதாக கூறுகிறது.

மேலும், மாதிரிகளின் மரபணுக்கள் மீதான ஆய்வில் 287 மரபணுக்கள் எடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உயிரியல் கடிகாரம் எனப்படும் சிர்காடியன் ரிதம் நாள் முழுவதும் சீராக இயங்கி வருவது தெரிய வந்தது.

அதன் பிறகு, அதில் ஒரு மரபணுவில் மாற்றம் செய்து, உயிரிழப்பு பாதிப்பை குறைப்பததை அறியும் முயற்சியாக எலிகள் மீது மருந்துகளை செலுத்தி அவர்கள் சோதனை நடத்தினர்.

“பேராசிரியர் ஸ்டேல்ஸ் கூறுகையில், காலையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் அதிக அளவிலான சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடிய அளவுக்கு சாத்தியமானது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளதாக நம்புகிறோம்,” என்றார்.

“எனினும், அது தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்,” என அவர் கூறுகிறார். பிற வகை அறுவை சிகிச்சைகளிலும் இந்த சிர்காடியன் ரிதம் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த டாக்டர் மைக் நேம்டொன் கூறுகையில், “பிரிட்டனில் ஆயிரக்கணக்கானோருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகளை பிற மருத்துவமனைகளிலும் நடத்தினால், அது நிபுணர்களின் இதய நோய் அறுவை சிகிச்சை அல்லாத மற்ற அறுவை சிகிச்சைகளுக்கான திட்டமிடலுக்கு பெரிதும் உதலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *