ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இன்று (சனிக்கிழமை) கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

தேசிய தமிழ் தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார்.

நிகழ்வு நடைபெறும் யாழ் இந்துக் கல்லூரியை அவர் வந்தடைந்த போது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *