சிறையை கல்விக்கூடமாக மாற்றிய பெண்

 

சியோரா லியோனில் பிறந்து வளர்ந்த “மிரியம்” பள்ளிக்கு சென்றதில்லை. வளர்ந்த பிறகு எழுத படிக்கத் தெரியாமல் சிரமப்பட்டார். அந்த இடத்தில் காரணமில்லாமல் இருந்ததற்காக தான் கைது செய்யப்பட்டதை, வேறு குற்றம் என்று தவறாக புரிந்தார் மிரியம்.

ஆனால், சிறைதான் அவரது முதல் வகுப்பறையாக மாறியது. தான் படிக்கக் கற்றுக் கொண்ட கதையை சிலரின் உதவியுடன் எழுதியிருக்கிறார் மிரியம்.

“நீங்கள் செய்த குற்றம் என்ன? குற்றவாளியா இல்லையா? ”

“என்ன? எனக்கு புரியவில்லை.”

“நீ குற்றவாளியா? பதில் சொல்லுங்கள்.”

“ஆமாம் ஐயா.”

ஒரு வருடம் கழித்து, நான் சியரா லியோனில் உள்ள ஃப்ரீடவுன் பெண்கள் சீர்திருத்த மையத்தில் (Freetown Female Correction Centre) இருந்து விடுவிக்கப்பட்டேன். நான் ஏன் அங்கு இருந்தேன்? குற்றவாளி என்ற வார்த்தை என்னவென்று எனக்குத் தெரியாது என்பதால்! எனக்கு புரியும்படி மொழிபெயர்த்து சொல்ல யாரும் இல்லை.

35 வயதான நான் ஐந்து குழந்தைகளின் தாய். ஒரு பெரிய திருட்டு சம்பவம் தொடர்பாக எனது சுற்றுவட்டாரப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டேன். நாங்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, கல்வியறிவு இல்லாத நான் தவறான வேண்டுகோளை முன்வைத்தேன்.

எனது தண்டனைக் காலம் தொடங்கியபோது, பெண் கைதிகளுக்கு வாரம் இருமுறை வழங்கப்பட்ட வகுப்புகளில் கலந்து கொண்டு எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

என்னைப்போலவே, சக சிறைவாசிகள் பலர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், பள்ளிக்கூடத்திற்கே செல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு, நான் கைநாட்டு வைப்பதில் இருந்து கையெழுத்து போடத் தெரிந்தவளாக மாறிவிட்டேன். எனது சொந்த பெயரை எழுதுவதற்கு கற்றுக்கொண்டேன்.

வகுப்புகளையும், படிப்பையும் மிகவும் நேசித்த எனக்கு, பிற பெண்கள் வைத்த செல்லப்பெயர் “பள்ளிப் பெண்”.

சீர்திருத்த மையத்திலிருந்து நான் வெளிவந்த பிறகு, குடும்ப வருவாய்க்காக சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன்.

புதிதாக கற்றுக்கொண்ட திறமைகள், என்னை உள்ளூர் சந்தையில் பெண்களின் தலைவியாக உயர்த்தியிருக்கிறது. நிதி தொடர்பான அனைத்து பதிவுகளையும் சரியாக பராமரிக்க கல்வி எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

சந்தை வேலையில் இருந்து வீடு திரும்பியதும், சிறையில் எனக்கு கற்றுக் கொடுத்ததை அவர்களை போலவே எளிமையாக என் அண்டை வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு வாசிக்கவும் எழுதவும் கற்பிக்கிறேன்.

படிக்க, எழுத, கணக்குபோட தெரிந்தவள் நான் என்று கூறும் என் கல்வி சான்றிதழ் எனக்கு பெருமையளிக்கிறது.

எழுதப் படிக்க தெரிந்தாலும், இந்த கதையை எழுதுவதற்கு எனக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் இந்த காகிதத்தில் எழுதப்பட்டுள்ளது என்ன என்பதை படிக்கும் அளவுக்கு எனக்குத் தெரியும் என்பதையே சொல்ல விரும்புகிறேன். இது எனக்கு கொடுத்திருக்கும் உறுதியும், நம்பிக்கையும் இதற்கு முன் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை.

வகுப்பறையில் ஆசிரியர்களும், கைதிகளும்

சிறையில் ஆசிரியராக பணிபுரியும் ஹஜா க்ப்லா, EducAid மற்றும் AdvocAid போன்ற அறக்கட்டளைகள் மூலம் பெண்களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கிறார். சிறு வயதில் பள்ளிக்கு செல்லாத மிரியம் போன்றவர்களுக்கு கல்வி கண்ணை திறக்கிறார்.

கல்வியறிவு இல்லாத காரணத்தால் மட்டுமே நீதியை கைநழுவவிட்ட அசாதாரண கதைகள் கொண்ட பல பெண்களை சீர்திருத்த மையங்களில் சந்தித்திருக்கிறேன். ஆவணங்களில் எழுதியிருப்பதை புரிந்து கொள்ளாமல் கைரேகை வைத்தோ, கையெழுத்திட்ட அவர்கள், குற்றவாளிகள் எனக் தண்டனை பெற்றிருக்கிறார்கள். சிறு தொகையை கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காதது, முற்றிலும் நியாயமற்ற ஒப்பந்தங்களை மீறியது போன்ற அற்ப காரணங்களுக்காக சிறைதண்டனை பெற்றவர்களை பார்த்திருக்கிறேன்.

கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைத்தவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை, சிறையில் எழுத்தறிவு வகுப்புகளை நடத்தும்போது தெரிந்து கொண்டேன். அதேபோல், பள்ளிக்கல்வியை அணுக முடியாதவர்கள் எப்படி உரிமையற்று இருக்கிறார்கள் என்பதையும், முற்றிலும் தகுதியற்றவர்களாக இருப்பதையும் உணர்ந்தேன்.

பேனாவை கையாள முடியும், பட்டியலில் இருக்கும் தங்கள் பெயரை கண்டுபிடிக்க, தங்களுடைய தொழிலின் லாபங்கள் அல்லது செலவுகளை கணக்கிட, புத்தகம் படிப்பவர்களாக மாறுவதை பெண்கள் பெருமையுடன் உணர்வதை காணும் பல தருணங்கள் எனக்கு வாய்த்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும் பெண்கள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெறும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்ப்பது மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும்.

பெண்கள் தங்கள் முழு திறனை உணர வழிவகுக்கும் ஒரு வினையூக்கியாக நான் இருப்பதை, சீர்திருத்த மையத்திற்குள்ளும், வெளியுலகில் வேலை செய்யும்போதும் உணர்ந்திருக்கிறேன்.

கல்வி என்பது ஜன்னல்கள் மற்றும் வாய்ப்புகளைத் திறப்பதற்கான ஓர் அற்புதமான கருவி என்பதோடு, ஒரு பெண்ணின் சொந்த வாழ்க்கையை கட்டுப்படுத்தும் வாய்ப்புகளிலும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.

EducAid மூலம் எனக்கு கல்வி சாத்தியமானதால், வாழ்வை நேர்மறையாக அணுகுகிறேன். கல்வியை எந்த வயதிலும் கற்கலாம் என்பதற்கும், மாற்றத்திற்கான முகவராகவும் இருக்கிறேன்.

சியாரோ லியோன் மற்றும் வேறு எந்த இடத்திலும் நீதி மற்றும் சமத்துவத்தை பார்க்க வேண்டுமானால், உதவி தேவைப்படும் பல இளம் பெண்களுக்கு உதவி செய்து, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, அண்மையில் எபோலா தொற்றுநோய்க்குப்பின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மனித உரிமை அமைப்புக்களுக்கு கிடைக்கும் நிதி மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது.

இதனால், 10 ஆண்டுகளில் முதன்முறையாக கல்வியறிவு வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகுப்புகள் மீண்டும் தொடங்க வேண்டும் என சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் பெண்கள் விரும்புகிறார்கள். சிறையில் இருந்து வெளியேறும்போது பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்த கல்வியறிவு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *