ஊடகக் கனவை நனவாக்கும் ஜே. எம். மீடியா நிறுவனம்

ஊடகத் துறையில் தனக்கான இடம்பெற்று மிளிர்ந்து நிற்கும், மாவனல்லை JM Media College நான்காவது வகுப்பு மாணவர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில்.. என் கல்லூரி JM Media குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

ஆம் ஊடகக் கனவுக்கு உயிர் தந்த கல்லூரி.. தன்னாலான வகுப்புக்களை மிகப்பிரமாதமாய் நடாத்தித் தந்தது. இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தினதும், இந்திய காமராஜ் பல்கலைக்கழகத்தினதும் பாடத்திட்டங்களை உள்வாங்கி வித்தியாசமான முறையில் முழுதும் செயன்முறையுடன் கூடியதாக வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.
கூடவே Field Trip (வெளிக்களச் சுற்றுலா), தன் மாணவர்களின் இயக்கத்தில் கம்பீரமாய் ஒலிக்கும் துதி FM போன்ற எதையும் மறக்க முடியாது..

பிரபல ஊடகவியலாளர்களைக் கொண்டு வகுப்புக்கள் நடாத்தப்பட, பிரமாதமான கற்பித்தல் செயன்முறை வார்த்தைக்குள் அடங்காததே..

அது மட்டுமல்லாது மாவனல்லை JM Media கல்லூரியில் தனது ஊடகப் பயிற்சி நெறியை முடித்த நான் உட்பட என் சகாக்கள் ஒவ்வொருவரும் இன்று வெறுமனே இல்லாமல் ஊடகத் துறையில் ஏதோ ஒரு விதத்தில் சாதித்துக் கொண்டிருக்க, இங்கு வழங்கப்பட்ட கல்வி சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கவல்லது.

Short Film Documentary
Photography
News Reading and writing
Stage Announcement
Script Writing
Field Trip
ect…

போன்ற இன்னும் பல பாடத்திட்டங்களை உட்கொண்ட இப்பயிற்சி நெறி, ஒவ்வொருவரினதும் ஊடகக் கனவுக்கு விலைபேசும் வல்லமை கொண்டது..

ஆக, எம் கல்லூரியில் இணைந்து கொள்ளவிரும்பும் யாரும் தயக்கம் காணாமல், ஒரு நல்ல கல்லூரியில் ஊடகப் பயிற்சிநெறியை ஆரம்பிக்கப் போகும் மகிழ்ச்சியோடு இணைந்து கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்..👍🏻

இணைந்து கொள்ளவிருக்கும் JM Media வின் நான்காம் வகுப்பு புது நட்புக்களுக்கு, பழைய மாணவர்கள் சார்பான முன்கூட்டிய வாழ்த்துக்கள்..

வருக! வளர்க! வெல்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *