இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை இடையே கொழும்பில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா அபாரம்

இந்நிலையில் கொழும்பில் கடந்த 3-ஆம் தொடங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இந்திய மட்டைவீச்சாளர்கள் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் சதமடித்தனர். இவர்களுக்கு பக்கபலமாக அஸ்வின், ஜடேஜா மற்றும் சாஹா ஆகியோர் அரை சதமடித்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரங்களை மட்டுமே எடுத்து. இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

439 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் முறைப்படி 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை அளித்தனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

கருணரத்னே 141 ரன்களையும் குசல் மெண்டிஸ் 110 ரன்கள் ஆகியோர் இலங்கை அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில்அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதை ஜடேஜா பெற்றார்.

இதன் மூலம் இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *