மகளிர் உலக கோப்பை கோட்டைவிட்டது ஏன்? : இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

இந்தியா கோட்டைவிட்டது ஏன்? 5 முக்கிய காரணங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஒருகட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 164 ரன்களை மட்டும் எடுத்து தடுமாறிய இங்கிலாந்து ஸ்கிவர் மற்றும் பிரண்ட் ஆகியோரின் நிதான ஆட்டத்தை 228 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

அரைச்சதம் அடித்த ஸ்கிவர்
படத்தின் காப்புரிமைICC
Image captionஅரைச்சதம் அடித்த ஸ்கிவர்
  • தொடக்க அதிர்ச்சி

தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தானா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் இந்திய அணியின் ரன்விகிதம் குறைந்தது.

பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மித்தாலி ராஜ் பொறுப்பாக விளையாடினாலும் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.இதுவும் இந்தியஅணிக்கு பாதகமாக அமைந்தது.

  • அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுக்கள்

பூனம் ராவத் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நேர்த்தியாகவும், அடித்தாடியும் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

இருவரும் அரைச்சதம் எடுத்த நிலையில், ஒருவருக்கு பின் மற்றவர் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழக்க ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது.

  • பரபரப்பான தருணங்களில் வெளிப்பட்ட அனுபவமின்மை

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டிருந்த போது, இந்திய வீராங்கனைகளால் நிதானமாக விளையாட இயலவில்லை.

முக்கிய தருணத்தில் ஆட்டமிழந்த வேதா கிருஷ்ணமூர்த்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமுக்கிய தருணத்தில் ஆட்டமிழந்த வேதா கிருஷ்ணமூர்த்தி

12 பந்துகளில் 10 ரன்கள் என்ற நிலையில் வெற்றி இலக்கு இருந்த போது விக்கெட் இழக்காமல் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால், பின்வரிசை இந்திய வீராங்கனைகளால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

  • சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்து அணி 4-ஆவது முறையாக உலக கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்கள்தான்.

சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து

பிரண்ட் சிக்கனமாக பந்துவீச்சை இந்திய அணியின் ரன்விகிதத்தை கட்டுப்படுத்தினார். மறுமுனையில் பந்துவீசிய ஷ்ரப்சோல் 6 விக்கெட்டுக்களை எடுத்தார். இவரது சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

அதேவேளையில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கர்களுக்கு பக்கபலமாக அந்த அணியின் ஃபீல்டர்களும் செயல்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *