மகளிர் உலக கோப்பை: இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட், இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரார்கள் வின்ஃபீல்ட் மற்றும் பேமவுண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தனர்.

வின்ஃபீல்ட்டின் விக்கெட்டை இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி காயக்வாட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் 1 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

துல்லியமான பந்துவீச்சு

இங்கிலாந்து அணி ஒரு பக்கம் விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்தாலும், அந்த அணியின் ஸ்கிவர் மற்றும் பிரண்ட் ஆகியோர் நன்கு அடித்தாடினர்.

துல்லியமாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமி

ஆனால், இந்திய பந்துவீச்சாளரான ஜுலான் கோஸ்வாமியின் துல்லியமான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. தான் பந்துவீசிய 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை ஜுலான் கோஸ்வாமி எடுத்தார்.

இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 229 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

GETTY IMAGESபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக வியாழக்கிழமையன்று டெர்பியில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், வியாழக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் நுழைந்தது.

அரையிறுதி போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர் உதவியுடன் 171 ரன்களை விளாசினார் கவுர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *