நாளை முதல் தினசரி நூதனப் போராட்டம்: மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகள்

விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி, நாளை திங்கட்கிழமை முதல் தினசரி நூதனப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தார்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றதால் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

முன்னதாக, காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஜந்தர் மந்தர் பகுதிக்கு அய்யாக்கண்ணு குழுவினர் வந்தனர்.

நாளை முதல் தினசரி நூதனப் போராட்டம்: மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகள்

அப்போது செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், கடந்த முறை டெல்லியில் விவசாயிகள் போராடியபோது, தமிழக முதல்வர் நேரில் வந்து எங்கள் கோரிக்கைகளை இரண்டு மாதங்களில் நிறைவேற்றித் தருவதாகக் கூறினார். அதன்பேரில் போராட்டத்தை தாற்காலிகமாக தள்ளிவைத்து விட்டு ஊருக்குத் திரும்பினோம். உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என முதல்வர் கூறினார். ஆனால், தற்போது வழக்கு போட்டு தடை உத்தரவையும் தமிழக அரசு பெற்று விட்டது என்றார்.

மேலும், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், விவசாயிகளின் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க மாட்டோம், அடகு வைத்த நிலத்தையும் நகைகளையும் ஏலம் விட மாட்டோம் என்று கூறினார். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று அய்யாக்கண்ணு குறிப்பிட்டார்.

நாளை முதல் தினசரி நூதனப் போராட்டம்: மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகள்

இந்த விவகாரம் குறித்து பாரத ரிசர்வ் வாங்கி துணை ஆளுநரை விவசாயிகள் சந்தித்துப் பேசியபோது, அரசின் கொள்கை விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறி விட்டதால் டெல்லிக்கு மீண்டும் போராட வந்துள்ளோம் என்றார் அய்யாக்கண்ணு.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளதால், அதன் முன்னோட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 102 விவசாயிகள் கோவணத்தை கட்டிக் காண்டு பிரதமரின் வீடு நோக்கி பேரணியாகச் சென்றோம். காவலர்கள் எங்களைப் பிடித்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் வைத்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வைக்கப்பட்டிருந்த எங்களுக்கு உணவு கூட வழங்கவில்லை என்று அய்யாக்கண்ணு கூறினார்.

தங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை ஜந்தர் மந்தரை விட்டுச் செல்ல மாட்டோம். தினமும் ஒவ்வாரு நாளும் விதவிதமான போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *