சீனாவின் மனித உரிமைப் போராளி லியு ஷியாவ்போவ் புற்றுநோயால் மரணம்

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற சீனா எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான லியு ஷியாவ்போவ், மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு வயது 61.

சீனாவின் ஒரு கட்சி அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக மனுக்களை எழுதி, ஆன்லைனில் வெளியிட்டுவந்த குற்றச்சாட்டில், 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

61 வயதான லீயு, வடகிழக்கு நகரமான ஷென்யாங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார்.

மேற்கத்திய அரசாங்கங்களும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்களும் லியுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சீனாவிடம் முன்வைத்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. அவர் விமானப் பயணம் செய்யும் நிலையில் உடல் நலம் இல்லை என்று சீன அதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *