ஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் – முக்கிய தகவல்கள்

இந்தியாவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) குறித்து பரவலாக எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜிஎஸ்டி குறித்து நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கற்பனைகள் என்ன, அதன் உண்மை நிலவரங்கள் என்ன என்பதை மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா விளக்கியுள்ளார். அதுகுறித்த, ஏழு முக்கிய அம்சங்கள்:

நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கற்பனைகள், உண்மை நிலவரங்கள் :

கற்பனை உண்மை
1 விலைப்பட்டியலை, இணையதள வசதியுடைய கணினி மூலமே உருவாக்க வேண்டும். விலைப்பட்டியல் ரசீதுகளை கையாலும் எழுதிக் கொடுக்கலாம்.
2 ஜிஎஸ்டி மூலம் தொழில் செய்ய தொடர் இணைதள இணைப்பு தேவை. ஜிஎஸ்டி மாதாந்திர கணக்கு தாக்கலின்போது மட்டுமே இணையதள இணைப்பு தேவை.
3 தற்காலிக அடையாள எண் மட்டுமே உள்ளது. தொழில் தொடங்க இறுதி எண்ணுக்காக காத்திருக்கிறேன். தற்காலிக அடையாள எண்தான் இறுதி ஜிஎஸ்டி அடையாள எண் (ஜிஎஸ்டிஐஎன்). உடனே தொழில் தொடங்கலாம்.
4 எனது வணிக பொருளுக்கு முன்பு விலக்கு இருந்தது. ஜிஎஸ்டியில் தொழில் தொடங்கும் முன்பே பதிவு செய்ய வேண்டும். தொழிலை தொடர்ந்து செய்யலாம். 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
5 மாதம் மும்முறை கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். மாதத்தில் ஒருமுறை மட்டும், மூன்று பகுதிகளாக கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். முதலாவது பகுதியை விற்பனையாளர் செய்ய மீதமுள்ளவை, தானியங்கி முறையில் செய்யப்படும்.
6 சிறு வியாபாரிகள் விற்பனை ரசீது வாரியாக கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் சில்லறை வியாபாரிகள் (பிடூசி) மொத்த விற்பனையின் சுருக்கத்தை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.
7 முந்தைய மதிப்புக் கூட்டு வரியுடன் ஒப்பிடுகையில், ஜிஎஸ்டி வரி அதிகம். முன்பு கலால் வரி மற்றும் பிற வரிகள் மறைமுகமாக இருந்தன. அந்த வரிகள் ஜிஎஸ்டி மூலம் வெளிப்படையாக வசூலிக்கப்படுகின்றன. அதனால், அதிகம் போன்ற தோற்றம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *