பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வென்ற மக்ரோங்கின் கட்சி

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமான்வெல் மக்ரோங் வெற்றிபெற்ற சில வாரங்களுக்கு பிறகு, அவருடைய கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை வென்றிருக்கிறது.

ஏறக்குறைய எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 577 தேசியப் பேரவை இடங்களில், மக்ரோங்கின் ‘லா ரீப்ளிகன் மார்ச்’ கட்சி, அதனுடைய மோடெம் கூட்டணி கட்சிகளும் இணைந்து 300க்கு மேலான இடங்களை வென்றிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு வாக்களித்தவர்களை விட தற்போது வாக்களித்தவர்கள் குறைவாக இருந்ததால், சிலர் எதிர்பார்த்ததைவிட வெற்றி பெற்ற இடங்கள் குறைவாகும்.

ஓராண்டுக்கு முன்னரே இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. இதிலுள்ள பாதி உறுப்பினர்களுக்கு அரசியல் அனுபவமே இல்லை.

ஃபிரான்சின் பிரதான கட்சிகள் எல்லாவற்றையும் புறந்தள்ளியுள்ள இந்த தேர்தல் முடிவு, 39 வயதான அதிபர் மக்ரோங்குக்கு , அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் , வர்த்தகத்திற்கு ஆதரவான சீர்திருத்தத் திட்டங்களையும், நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க தேவையான வலுவான ஆணை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *