மத்திய போர்ச்சுக்கலில் காட்டுத் தீ : இறந்தோரின் எண்ணிக்கை 62ஆக அதிகரிப்பு

போர்ச்சுக்கலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இறந்தோரின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பிராவின் தென் கிழக்காக 50 கிலோமீட்டர் (30மைல்) தொலைவில் இருக்கின்ற பெட்ரோகௌ கிரான்டே பகுதியில் இருந்து தங்கள் காரில் தப்பியோட முயன்றபோது பெரும்பான்யானோர் இறந்துள்ளனர்.

காயமடைந்துள்ள 20 பேரில் பலர் தீயணைப்பு வீர

“துரதிஷ்டவசமாக சமீபத்தில் நிகழ்ந்துள்ள காட்டுத் தீ சம்பவங்களில் அதிக சோகத்தை ஏற்படுத்திய சம்பவமாக இது தோன்றுகிறது” என்று போர்ச்சுக்கல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா தெரிவித்திருக்கிறார்.

“உயிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்” என்று அவர் கூறினார்.

பெட்ரோகௌ கிரான்டே பகுதி வீடுகள்படத்தின் காப்புரிமைEPA
Image captionபெட்ரோகௌ கிரான்டே பகுதியில் பல வீடுகள் எரிந்துள்ளன

முன்னதாக, புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 3 பேர் இறந்ததாகவும், ஃபிகுய்ரோ டோஸ் வின்ஹோஸ் – காஸ்தான்ஹெய்ரா டி பெராவை இணைக்கும் சாலையில் கார்களில் 16 பேர் இறங்துள்ளதாகவும் போர்ச்சுக்கல் வெளியுறவு அமைச்ர் ஜேர்கே கோமஸ் தெரிவித்தார்.

இரவில் மட்டுமே சுமார் 60 காட்டுத் தீ சம்வங்கள் நிகழ்ந்துள்ளதில் 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

நான்கு முன்னணி பகுதிகளில் தீ ஆக்ரோஷத்துடன் பரவியது என்று கோமஸ் தெரிவித்தார்.

இந்த காட்டுத் தீயை சமாளிக்க தண்ணீர் தெளிக்கும் இரண்டு விமானங்களை ஸ்பெயின் அனுப்பியுள்ளது.

இந்த பகுதியிலுள்ள வீடுகளை சாம்பலாக்கியிருக்கும் இந்த காட்டுத் தீ எவ்வாறு தோன்றியது என்பது இன்னும் தெரியவில்லை.

map

ஆனால், வறட்டு இடி மின்னல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கோஸ்டா தெரிவித்திருக்கிறார்.

போர்ச்சுக்கல்லில் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸூக்கு அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *