இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியாவுக்கு இலக்கு 265.!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணி 265 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்தியா ? ; 265 ரன்கள் இலக்குபடத்தின் காப்புரிமை@ICC

வங்கதேச அணியில், அதிகபட்சமாக, தமிம் இக்பால் 70 ரன்களையும், முஷ்ஃபிகர் ரஹீம் 61 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இந்திய அணியை பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீட் பும்ரா மற்றும் கேதார் ஜாதவ் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்திய அணி வெற்றி பெற 265 ரன்கள் தேவை. அந்த வெற்றியைப் பெற்றால், வரும் ஞாயிற்றுக்கிழமை ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

நேற்று புதன்கிழமை நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *