வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட `ராட்சத ராக்கெட்’: இஸ்ரோ சாதனை

ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று திங்கள்கிழமை மாலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

`ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.

ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

200 யானைகளின் எடையாகும்

ஜிஎஸ் எல் வி எம் கே3-டி1 புவியோடு இணைந்த சுற்று வட்டப்பாதையில் 4000கிகி எடை கொண்ட செயற்கைக்கோளையும், மேலும் சாதாரணமான புவி சுற்றுப் பாதையின் சற்று கீழ் உள்ள பாதையில் 10,000கிகி எடையுள்ள செயற்கைக்கோளையும் செலுத்தும் வல்லமை கொண்டதாகும்.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

`ராட்சத ராக்கெட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
Image caption`ராட்சத ராக்கெட்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இன்று வரை, இந்தியா, 2,300 கிகி எடைக்கு அதிகமான தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்த வெளிநாடுகளில் தயாரித்த ராக்கெட்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது.

640 டன் எடை கொண்ட ராக்கெட்டை செலுத்துவது இஸ்ரோவின் சாதனைகளில் மேலும் ஒன்றாகும்.

15 வருடங்களாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் எதிர்காலத்தில், விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்ப உதவக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *