இயற்கை பேரிடரால் நிகழ்ந்த பலி எண்ணிக்கை 211ஆக உயர்வு……

அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள அறிவிப்பின்படி, நள்ளிரவு 12 .00 மணி வரை இறந்தோரின் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

91 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள அந்த நிலையம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 805 குடும்பங்களை சேர்ந்த 7 லட்சத்து 4 ஆயிரத்து 815 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

கூடுதலான மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அங்கு இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 86ஆக பதிவாகியுள்ளது.

நிலச்சரிவு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

களுத்துறை மாவட்டத்தில் 65 மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 31 பேர் இறந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த அனர்த்ததில் 72 பேர் காயமடைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை இன்னும் நீடித்து வருவதால் களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா,இரத்னபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்ட நிலச்சரிவு தொடர்பான எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கட்டட ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *