வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த வன உயிரினங்கள்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் வசித்த வன உயிரினங்களும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக வன உயிரின இலாகா கூறுகின்றது. பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முதலை மற்றும் பாம்பு போன்ற உயிரினங்களால், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக வன உயிரினங்கள் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் தாரக்க பிரசாத்.

”குளங்கள் , ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் வாழ்ந்த முதலை போன்ற வன உயிரினங்கள் வெள்ளத்தினால் வேறு பிரதேசங்களுக்கு அடித்துச் செல்லப்படும் போது அதன் நடமாட்டம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

”வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட அந்த உயிரினங்கள் தமது வழமையான வாழ்விடங்களில் இருப்பதில்லை. இதுபற்றி மனிதர்களுக்கு விளக்கமும் இல்லை.” என்று சுட்டிக்காட்டும் டாக்டர் தாரக்க பிரசாத் ” அது பற்றி மனிதர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இல்லையேல் அது ஆபத்தாக அமையும் ” என்கின்றார்.

”முதலைகளை போன்று பாம்புகளும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தத்தின் பின்னர் சூழலில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனிதர்களின் காலில் மிதிபடும் வேளை அல்லது வேறு காரணங்களினால் மனிதர்களைத் தீண்ட முடியும்” என்றும் அவர் கூறுகிறார்.

ரத்னபுரா

இது போன்ற விபத்துகள் கடந்த கால அனர்த்தங்களின் போது பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக முதலை போன்ற வன உயிரினங்களைப் பார்வையிடச் செல்லும் சந்தர்பங்களிலே இந்த ஆபத்துகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால் பொது மக்கள் அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் டாக்டர் தாரக்க பிரசாத் அறிவுறுத்துகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *