ஃபிளமிங்கோ பறவைகள் ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கின்றது…!!

ஃபிளமிங்கோ பறவைகள் இரு கால்களால் நிற்கும் நிலையை காட்டிலும் ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அது அவற்றின் தனிப்பட்ட நிற்கும் பாணியாக இருக்கலாம். ஆனால், ஒற்றைக் காலில் பறவைகள் நிற்பது ஏன் ? எதனால் , என்பவை போன்ற கேள்விகள் நீண்டகாலமாக நிலவிவரும் புதிராகும்.

ஒற்றை காலில் நிற்கும் போது, ஒரு மந்தமான செயல்பாட்டில் நிலைத்திருக்கிறது.படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY
Image captionஒற்றை காலில் நிற்கும் போது, ஒரு மந்தமான செயல்பாட்டில் நிலைத்திருக்கிறது.

தற்போது, அமெரிக்காவை சேர்ந்த குழு ஒன்று ஃபிளமிங்கோக்கள் ஒற்றைக் காலில் நிற்கும் போது தசைகளை எவ்விததிலும் அசைக்கும் சுறுசுறுப்பான முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதை காட்டியுள்ளனர்.

ஒற்றை காலில் நிற்கும் போது, ஒரு மந்தமான செயல்பாட்டில் நிலைத்து, ஃபிளமிங்கோக்கள் மிதமான தூக்கத்திலிருக்கும் போதும் கம்பீரமாக நிற்க அனுமதிக்கிறது.

முன்பு, பறவைகள் ஒரு காலிலிருந்து மாறி மற்றொன்றில் நிற்பதன் காரணமாக, ஒற்றை காலில் நிற்கும் முறையானது தசை சோர்வை குறைக்க உதவுமா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

ஃபிளமிங்கோக்களின் இந்த பழக்கம் அவைகளின் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுவதாக மற்ற ஆராய்ச்சிக் குழுக்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தற்போது, அட்லாண்டாவில் உள்ள ஜியார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் யங்-ஹுய் ச்சாங் மற்றும் அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த லீனா எச் டிங் ஆகியோர் கூட்டாக ஃபிளமிங்கோக்களின் இந்த அசரவைக்கும் தந்திரத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய இயந்திர ரகசியங்களை கண்டறிந்துள்ளனர்.

உயிருள்ள மற்றும் இறந்த பறவைகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் பல சோதனைகளை நடத்தியுள்ளனர். ஆச்சரியமாக, ஃபிளமிங்கோ பறவைகளின் இறந்த உடல்கள் எவ்வித வெளிப்புற ஆதரவின்றி ஒற்றை காலில் நிற்க வைக்க முடியும் என்பதை இரு ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வை `செயலற்ற நிலையில், ஈர்ப்பு சக்தியுடன் இணைந்திருக்கும் முறை` என்று வர்ணித்துள்ளனர்.

ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கும் ஃபிளமிங்கோ பறவைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எனினும், இறந்த பறவைகளின் உடல்களை எவ்விதமான ஆதரவுமின்றி இரு கால்களால் நிற்க வைக்க முடியவில்லை. இந்த வகை நிலையில் சுறுசுறுப்பான தசை ஆற்றலின் ஓர் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதை இது வலியுறுத்துகிறது.

ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள பறவைகளை ஆய்வு செய்த நிலையில், அவை ஒற்றை காலில் நின்று கொண்டு ஓய்வெடுக்கையில் அவை நகர்வதென்பது அரிதான நிகழ்வாக இருந்தது. இதன்மூலம், ஃபிளமிங்கோவின் செயல்படாத நிலையின் ஸ்திரத்தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

பில்லெடெல்பியாவை சேர்ந்த விலங்கு நடத்தை நிபுணரும், செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் சோதனை உளவியலாளருமான மருத்துவர் மேத்யூ ஆன்டர்சன், இந்த ஆராய்ச்சிக் குழுவின் முடிவுகளை “ குறிப்பிடத்தக்க முன்னேற்றம்“ என்று பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *