ஆனால் நான்…….. ?

உதிக்கச்  செய்தான் உணர்வை

தெளிவாக்கினான் உள்ளத்தை

உயிரூட்டினான்  ஈமானியத்தை

மெருகூட்டினான் என்னை

 

நிரூபித்து விட்டான் அவன் இருப்பை

அள்ளித்தந்து விட்டான் அவன் அன்பை

 

இறுகிய என்னுள்ளத்தில் நீர் பாய்ச்சி விட்டான்

விதைகள் தளிர்விட அருளிவிட்டான் ரமழானை

 

அவன் கண்ணியமறிந்தேன்

தினம் கண்கள் கசிந்தேன்

அவன் இடமறிந்தேன்

நான் இடமறியாமல் போனேன்

 

கலங்கிய என் சிந்தையை புதுப்பித்தவனே !!!

ஒரு நொடியும் உன்  நினைவிழக்கா வரம் வேண்டும் எனக்கு

தினம் சொரியும் உன் அருள்களுக்கு

எங்கனம்  நான் ஈடு செய்ய

 

அருளி விட்டாய் ரமழானை

மீட்சிபெற வைக்கிறாய் என்னை

உன் அன்பின் வரையறைதான் என்ன!!!

 

என் பரீட்ச்சை வெற்றியின் பிண்ணனியில் நீ

என் வாழ்வின்  வெற்றியின் பிண்ணனியில் நீ

 

எனக்கு சந்தர்பமளிக்கிறாய்   –   ஒரு தடவையல்ல

பல தடவைகளுமல்ல  வாழ் நாள் முழுக்க

ஆனால் நான்……………………………………….?

 

 

(NUSRA NOOR MUHAMMED. GELI-OYA.)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *