ஹெரோயின் கடத்த முயற்சி செய்தவர் கைது: திருகோணமலை சிறைச்சாலை

திருகோணமலை சிறைச்சாலைக்குள் நூதானமான முறையில் ஹெரோயின் கடத்த முற்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிக்கு உணவுப்பொதியினுள் பற்பசை பக்கற்றிற்குள் வைத்து 100மில்லிகிராம் ஹெரோயினை  கொடுக்கமுற்பட்ட திருகோணமலை நகரில் வசிக்கும் 20 வயது இளைஞனை துறைமுக பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

தமக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் ஆட்டோ ஓட்டுனரும் தமக்கு அறிமுகமான ஒருவரே பார்சல ஒன்றைக்கொடுத்தனுப்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்ததையடுத்து உப்புவெளியில் வசிக்கும் இக்கடத்தலுக்கான பிரதான சூத்திரதாரியை கைது செய்யும் நடவடிக்கையில் துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *