கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஓவ் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது பஞ்சாப்

பிளே ஓவ் சுற்­றுக்­கான வாழ்வா? சாவா? போட்­டியில் கொல்­கத்தா அணியை 14 ஓட்­டங்­களால் வீழ்த்­தி­யது பஞ்சாப். இதன் மூலம் தொட­ரி­லி­ருந்து பிளே ஓவ் சுற்று வாய்ப்பை தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது.

கொல்­கத்தா நைட்­ரைடர்ஸ், – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மொஹா­லியில் நேற்று நடை­பெற்­றது. இந்த போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வாழ்வா? சாவா? என்­ப­தாக அமைந்­தது. இதில் தோல்­வி­ய­டைந்தால் பஞ்சாப் அணி பிளே ஓவ் வாய்ப்பை இழந்­து­விடும் என்ற நிலையில் ஆடி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற கொல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பஞ்சாப் அணியை துடுப்­பெ­டுத்­தா­டும்­படி பணித்­தது. அதன்­படி பஞ்சாப் அணியின் மார்ட்டின் குப்தில், வோரா ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கினர்.

வோரா 16 பந்­து­களில் 25 ஓட்­டங்­களை எடுத்த நிலை­யிலும், குப்தில் 16 பந்துகளில் 12 ஓட்­டங்கள் எடுத்த நிலை­யிலும் ஆட்­ட­மி­ழந்­தனர். அடுத்து வந்த ஷோன் மார்ஷ் 11 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேறி ஏமாற்­ற­ம­ளித்தார்.

4ஆவது வீர­ராக கள­மி­றங்­கிய சகா 38 ஓட்­டங்­க­ளையும், அடுத்து வந்த மெக்ஸ்வெல் 25 பந்­து­களில் 44 ஓட்­டங்­க­ளையும் எடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 167 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்­டது.

பின்னர் 168 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கொல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணி கள­மி­றங்­கி­யது.

அந்த அணியின் சுனில் நரேன் மற்றும் லீன் ஜோடி ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கினர். இதில் நரேன் 18 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேற, லீன் 84 ஓட்­டங்­களை விளா­சினார். அதன்­பி­றகு வந்த கம்பீர்(8), உத்­தப்பா (0), பாண்டே(18) யூசுப் பதான் (2) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டங்களால் தோற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *