மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவை விசாரணையில் இருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக குற்றவியல் சதி வழக்கை முன்னாள் பீகார் மாநில முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சந்திக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னதாக, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மீது குற்றவியல் சதி விசாரணை நடத்த சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி, குற்றவியல் சதி உள்பட பல வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தண்டனை பெற்றார். லாலு பிரசாத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கிய போது அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது.

தனது மனைவியுடன் லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionதனது மனைவியுடன் லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்)

தனது கட்சித் தலைமைப் பணியில் லாலு பிரசாத் யாதவ் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், அவரால் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

இந்நிலையில், லாலு மீதான வழக்கு ஒன்றில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது

இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இன்று திங்கள்கிழமை இது தொடர்பாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மாட்டுத்தீவன வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீதான தனி விசாரணை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *