வடகொரியாவுக்கு எதிராக சதி? அமெரிக்க பிரஜை கைது

தங்கள் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு அமெரிக்க பிரஜையை வடகொரியா கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

பியூஎஸ்டி என்றழைக்கப்படும் பியோங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த கிம் ஹாக்-சாங், கடந்த மே 6-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாக கேசிஎன்ஏ செய்தி ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, பியூஎஸ்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கிம் சாங்-டக் உள்பட மூன்று அமெரிக்க பிரஜைகள் தற்போது வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பியூஎஸ்டி பல்கலைக்கழக நபர் சந்தேகத்தின் பேரில் கைதுபடத்தின் காப்புரிமைPUST
Image captionபியூஎஸ்டி பல்கலைக்கழக நபர் சந்தேகத்தின் பேரில் கைது

தனது நாட்டு குடிமக்களை கைது செய்து அவர்களை வடகொரியா பிணைக்கைதிகளாக பயன்படுத்துவதாக கடந்த காலங்களில் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *