பெரிதும் அறியப்படாத இந்திய – வட கொரிய வர்த்தக உறவுகள்

சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம்.

உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது.

வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ள தடைகளை கடைபிடிக்கும் வகையில் இந்த வர்த்தக நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா கூறியிருக்கிறது.

ஆனால், சமீப காலம் வரை, இந்தியா வட கொரியாவுக்கு 76.52 மில்லியன் மதிப்பிலான ஏற்றுமதியையும், 132.53 மில்லியன் மதிப்புக்கான இறக்குமதியும் 2014-15 நிதியாண்டில் நடத்தியிருப்பதாக அரசு தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

எண்ணெய் உணவுகள், பருத்தி நூல், துணிகள், தாதுக்கள் மற்றும் கனிமப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்கள், ரெத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள், உலோகங்கள் மற்றும் இறைச்சி போன்றவை இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களில் முக்கியமானவைகளாகும்.

வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியாபடத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES

இந்தியாவில் இருந்து அதிக நுகர்வு பொருட்களை இறக்குமதி செய்ய வட கொரியா மிகவும் ஆர்வமாக இருந்தாலும், குறைவான அந்நிய செலாவணியும், நிறுவப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு அமைப்பு வழியாக உத்தரவாதமில்லாத பணம் வழங்கும் முறையும் இதனை மிகவும் கடினமாக்கிவிட்டன.

ஐக்கிய நாடுகள் அவை பொருளாதார தடைகளை விதித்த பின்னர் பெரும்பாலான மேற்குலக நாடுகள் வட கொரியாவோடு நடத்தி வந்த வர்த்தகம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டன.

 

வட கொரியா பாகிஸ்தானோடு நெருங்கிய தந்திரோபாய உறவுகளை பேணி வந்தாலும், நீண்டகாலமாக வட கொரியாவோடு அதிகம் விளம்பரப்படுத்திக்கொள்ளாத ராஜீய உறவுகளை இந்தியா பேணிவந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2015 ஏப்ரல் மாதம், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி சு-யோங் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, வட கொரியாவை இந்தியாவின் “கிழக்கு நாடுகள் கொள்கையில் சட்டத்தில்” இணைத்துகொள்ள வேண்டுகோள் விடுத்தார்,

வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியாபடத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES

இரண்டு தசாப்தங்களுக்கு மேலான காலத்தில், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது உயர்நிலை அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுதான்.

வட கொரியோவோடு நடத்திய அனைத்து வர்த்தகங்களுக்கும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர் டாங்கிகள், தாக்குதல் வாகனங்கள், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் மென்ரக ஆயுதங்கள் போன்ற பாதுகாப்பு ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட வர்த்தக பொருட்களில் அடங்குகின்றன.

 

வர்த்தக தடை தவிர, வட கொரியாவுக்கு வழங்கப்படும் அறிவியல் பயிற்சி, குறிப்பாக ராணுவ அல்லது போலீஸ் பயிற்சிகள், இயற்பியல், வானூர்தியியல் மற்றும் அணு பொறியியல் பயிற்சிகள் எல்லாம் தடைசெய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வட கொரிய படைப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் மகாராஷ்டிராவிலுள்ள படைக்கல்வி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *