அம்பாரையில் பெளத்த வழிபாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் முழு அடைப்புப் போராட்டம்

இலங்கையில் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையமொன்று அமைப்பது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பௌத்தர்கள் அல்லாத தமது பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த பிரதேச முஸ்லிம்களினால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்காமம் பிரதேசத்தில் மூடப்பட்ட கடைகள்
Image captionஇறக்காமம் பிரதேசத்தில் மூடப்பட்ட கடைகள்

இறக்காமம் பிரதேச வெகுஜன அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம் பெற்றுள்ளன.

பேரணி முடிவில் பிரதேச செயலாளர்களிடம் இது தொடர்பாக ஜனாதிபதிக்கான மனுக்களும் கையளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இறக்காமம் பிரதேசத்தில் எந்தவொரு பௌத்த குடியிருப்புகளும் இல்லை. முஸ்லிம்களுடன் சில தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன.

மலையடிவாரத்தில் சில நாட்களுக்கு முன்பு அமைதியற்ற நிலை காணப்பட்டது
Image captionமலையடிவாரத்தில் சில நாட்களுக்கு முன்பு அமைதியற்ற நிலை காணப்பட்டது

பௌத்த குடியிருப்புகள் அல்லாத அந்த பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலையில் சில மாதங்களுக்கு முன்பு புத்தர் சிலையொன்று அங்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் உட்பட கடும் பௌத்தர்களினால் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

இறக்காமம் பிரதேசம் வெறிச்சோடி காணப்படுகின்றது
Image captionஇறக்காமம் பிரதேசம் வெறிச்சோடி காணப்படுகின்றது

இதற்கு பிரதேச மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து போலிஸாரால் நீதிமன்றத்திற்கு அந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டாலும் எதிர்ப்பாளர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது மாயக்கல்லி மலையடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காணி பௌத்த வழிபாட்டு மையம் அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில் நில அளவை செய்யப்பட்டுள்ளது.

அந்த காணியில் சில நாட்களுக்கு முன்னர் அங்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த கடும் போக்காளர்களினால் பௌத்த வழிபாட்டு மையம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சில நாட்களுக்கு முன்பு அமைதியற்ற நிலைபடத்தின் காப்புரிமைBBC SPORT
Image captionசில நாட்களுக்கு முன்பு அமைதியற்ற நிலை

பிரதேச முஸ்லிம்கள் மற்றும் மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் நேரில் சென்று தெரிவித்த எதிர்ப்புகள் காரணமாக அவ்வேளை பெரும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

போலிஸ் தலையீடு காரணமாக தற்போது நீதிமன்றம் வரை அந்த விவகாரம் சென்றுள்ள நிலையில் அந்த பணி இடைநிறுத்தப்பட்டு வெளியார் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த இடத்தில் ஏற்கனவே திட்டமிட்டவாறு பௌத்த வழிபாட்டு மையத்தை அமைப்பது எனவும் காணிக்கு உரிமை கோரும் தனியாருக்கு மாற்றுக் காணி வழங்குவது என்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் கூட்டிய கூட்டமொன்றில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *