101 வயதில் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற இந்தியப்பாட்டி

இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மான் கவுர் 100மீட்டர் ஓட்டப் போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நியூசிலாந்தின் ஆக்லான்ந்து நகரில் நடைபெற்ற, உலக மூத்தோர் போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

நூறு மற்றும் அதற்கும் அதிகமான வயதுடையோருக்கான பிரிவில் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே.

அந்தப்பாட்டி 100மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் ஓடினார்.

அவரை ‘சண்டிகரின் அதிசயம்’ என்று நியூசிலாந்தின் ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.

விளையாட்டு
படத்தின் காப்புரிமைAFP
Image captionதொடர்ந்து ஓடப் போவதாக மான் கவுர் கூறுகிறார்

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அவர், தனது 93ஆவது வயதில்தான் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

இதுவரை 17 தங்கப்பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *