உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு தடுப்பூசி

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி கானா, கென்யா மற்றும் மலாவியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் ஏழரை லட்சம் சிசுக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.

கொசுபடத்தின் காப்புரிமைREUTERS

இந்த தடுப்பூசி, பத்தில் நான்கு பேருக்கு மலேரியா ஏற்படுவதை தடுப்பதாக, பரிசோதனை முடிவுகள் பரிந்துரைத்ததை அடுத்து, உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொசுக் கடியினால் பரவும் மலேரியா பாதிப்பினால், ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

கொசுபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

ஒருவருக்கு இந்த புதிய தடுப்பூசி மொத்தம் நான்கு முறை வழங்கப்படவேண்டும். மாதம் ஒரு முறை என்று முதல் மூன்று முறைகளும், அதன் பிறகு 18 மாதங்கள் கழித்து நான்காவது முறையாக இந்த தடுப்பூசியை போடவேண்டும்.

சுகாதார வசதிகள் குறைவாக உள்ள உலகின் பல பகுதிகளில், இதை செய்ய முடியுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *