ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கியது

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கியது. பல தசாப்தங்களுக்கு பிறகு யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தல் இது.

வாக்குப்பதிவு துவங்குவதற்கு சில நாட்கள் முன் வரை, முப்பது சதவிகிதம் வரையிலான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நான்கு முக்கிய வேட்பாளர்களில் இமானுவேல் மக்ரோங், மரைன் லெ பென், மற்றும் ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய மூவரும், மைய நீரோட்ட அரசியலுக்கு வெளியே உள்ளவர்களாக தங்களை முன்நிறுத்துபவர்கள்.

பிரான்சுவா ஃபியோங், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல அமைச்சரவை பதவிகளை வகித்தவர்.

முன்னணி வேட்பாளர்களான இந்த நால்வருக்குமே அறுதி பெரும்பான்மை பெறும் சாத்தியங்கள் குறைவாக இருக்கிறது. பெரும்பான்மை வாக்குகளை யாரும் பெறாவிட்டால், அதிக வாக்குகள் பெற்ற முதல் இருவருக்கும் இடையிலான போட்டித் தேர்தல் அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறும்.

நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
படத்தின் காப்புரிமைAFP
Image captionநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மத்திய பாரீசில் கடந்த வியாழக்கிழமையன்று போலீஸ் அதிகாரி ஒருவரை, ஐ.எஸ் தீவிரவாதி சுட்டுக் கொன்றதை அடுத்து, ஃபிரான்சில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நாடு முழுவதில் 50, 000 போலீசாரும், 7000 ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *