டிரம்பிற்கு மனநிலை பாதிப்பா? :உளவியல் நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயங்கரமான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவியல் நிபுணர்குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உளவியல் மருத்துவர்கள் குழு ஒன்று அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, குழு சார்பாக பேசியுள்ள உளவியல் நிபுணர் ஜோன் கார்னர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயங்கரமான உளவியல் பதிப்படைந்தநிலையிலேயே ஆட்சி நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள்முதலாகவே அவரது செயற்பாடுகள் அதிர்ச்சியூட்டுபவையாக அமைந்துள்ளதாகவும், அது ஆபத்தான மன நோயிற்கான அறிகுறியெனவும், இந்நிலையில் அவர் நாட்டை ஆட்சி செய்வது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு குறித்த உளவியல் நிலையில் டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்குமெனவும், நட்டு மக்களுக்கு டிரம்ப் தொடர்பான உண்மையை அறியப்படுத்துவதென்பது உளவியல் மருத்துவர்களான தமது தார்மிக கடமையென  ஜோன் கார்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *