மெய்சிலிர்க்க வைக்கும் முப்பரிமாண கூகுள் எர்த் காட்சிகள்

கூகுள் எர்த்தின் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவத்தில் பல்லாயிரம் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு கண்ணைக்கவரும் காணொளிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

புதிய கூகுள் எர்த் பல இடங்கள் மீது பறந்து செல்லும் முப்பரிமாண காட்சி அனுபவத்தை தருகிறது.

இயற்கை அழகு கொஞ்சும் இடங்களை நேரில் பார்க்கும் சுற்றுலா வழிகாட்டியாகவும் இவை அமைந்திருக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

பிபிசி உள்ளிட்ட பல நிறுவன காணொளிகளை கூகுள் இதற்காக பயன்படுத்தியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற டேவிட் அட்டன்பரோவின் குரலும், விலங்குகள் குறித்த அவரது விளக்கங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

“டேவிட் அட்டன்பரோவின் குரல் என்பது பூமியின் குரலைப்போன்றது”, என்கிறார் கூகுள் எர்த் நிறுவனத்தின் கோபால் ஷா.

அட்டன்பரோவை தங்கள் செயலிக்குள் கொண்டுவர முடிந்ததை பெருமையாக நினைப்பதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கூகுள் எர்த் என்பது கூகுள் மேப்பிலிருந்து மாறுபட்ட நோக்கம் கொண்டதென அந்நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

கூகுள் மேப் என்பது பயன்பாட்டாளர்களுக்கு வழிகாட்டியாக துணைக்கு வரும் நோக்கிலானது.

ஆனால் கூகுள் எர்த் என்பது பூமியின் இயற்கை அழகில் மெய்மறந்து பார்ப்பவர்கள் தங்களைத் தாங்களே தொலைக்க உதவுவது என்கிறது கூகுள் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *