மாவனல்லை தள வைத்தியசாலையின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

மாவனல்லை தள வைத்தியசாலையின் கனிஷ்ட மட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுமார் 200 க்கும் அதிகமான கனிஷ்ட மட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தற்போது இந்த ஆஸ்பத்திரியின் சிற்றூழியர்களுக்கான சீருடைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊழியர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் தாங்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவனல்லை தள வைத்தியசாலையின் நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Thanks Udhayam NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *