ஏப்ரல் விடுமுறையை ‘துதி FM’ உடன் ஆரம்பம் செய்யுங்கள்
ஏப்ரல் மாதம் 08ஆம் 09ஆம் திகதிகளில், காலை 8 மணிமுதல் 107.3 FM அலைவரிசையில் மாவனல்லை மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒலிபரப்பபடவுள்ளது.
மேலும், www.jmmedia.lk என்ற இணையத்தளத்திலும் JM MEDIA மொபைல் APP மற்றும் FACEBOOK Live (www.fb.com/JMmedia.LK) இலும் நேரடியாக செவிமடுக்கலாம்.
‘துதி FM’ இல், கழகங்கள், அமைப்புக்களின் அறிமுக நிகழ்ச்சிகள், பாடசாலை நிகழ்ச்சிகள், சிறப்புக் கலந்துரையாடல்கள், சிறுவர் பாடல்கள், கவிதை நிகழச்சிகள் என பலவகையான நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
வானொலிக்கு முன்மாதிரி ‘துதி FM’ என்றும் போல இம்முறையும் வானொலிக்கும் நேயர்களுக்குமிடையிலான இடைவெளியை குறைக்க பல நேரடி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கவுள்ளதால், அனைவரும் நேரடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
More Details 0777162511