எதிரார்த்த Result வரவில்லை! இரு மாணவர்கள் தற்கொலை!!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் மாணவன் ஒருவனும், மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று ஜா-எல மற்றும் ஹோமாகம ஆகிய இரு பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

ஜா எல – காணுவத பிரதேச பாடசாலை மாணவன் ஒருவர், கணித பாடத்தில் சித்தி பெறாமையினால் ஜா- எல – துடெல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை புகையிரதம் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் அனுராதபுரம் – ஊஸ்கல பிரதேசத்தினை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஹோமாகம – கிரிவத்துடுவ பிரதேசத்தினை சேர்ந்த சலனி லக்ஷானி எனும் மாணவி ஒருவரும் நேற்றைய தினம் தனது வீட்டின் அருகாமையில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவி ஹோமாகம மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதி வணீகக் கல்வி மற்றும் கணித பாடங்களில் சித்தி பெறாமையினால் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவியின் சடலம் தற்போது ஹோமாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *