உலகின் மிக நீளமான கட்டிடம் ‘தி பிக் பெண்ட்’

உலகின் மிக நீளமான கட்டிடம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் அமைக்கப்படவுள்ளது.இதற்கான வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தின் வடிவமைப்பு படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

உலகின் உயரமான கட்டிடமான டுபாயின் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு நீளமான கட்டிடத்தை நியூயோர்க்கில் அமைக்கத் திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி பிக் பெண்ட்’ எனப் பெயர் சூட்டப்படவிருக்கும் இக்கட்டடம் ஆங்கில எழுத்து ‘யு’ வடிவ வளைவு போன்று கட்டமைக்கப்படவிருக்கிறது.

4,000 அடி நீளம் (1.22km) இக்கட்டடத்தை ‘யு’ வடிவில் வளைத்து அமைக்கவுள்ளனர்.

ஓயோ ஸ்டூடியோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டடத்தில், வளைவுகளில் செல்வதற்கான ‘மின்னுயர்த்தி’ வசதியும் செய்யப்படவுள்ளது. நியூயோர்க்கின் மான்ஹட்டான் நகரில் இருக்கும் ’உயர்ந்த கட்டிடங்களுக்கான தளர்வு’ விதிகளுக்கு இக்கட்டிடம் மாற்றாக அமைந்துள்ளது. 4,000 அடி உயரமான கட்டிடமாக இல்லாமல் 4,000 அடி நீளமான கட்டடமாக நிலைநிறுத்தவுள்ளனர்.

நியூயோர்க் கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த வடிவமைப்பின் கட்டமைப்புக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *