வாழைச்சேனையில் டெங்கு நோயினால் 58 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 2017 ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் 23ம் திகதி வரை ஐம்பத்தெட்டு (58) பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்;.ரீ.நஜீப்ஹான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளில் வாழைச்சேனை 206டி பிறைந்துரைச்சேனை, செம்மண்ஓடை பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதிகரத்து வரும் டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை என்பவற்றுடன் இணைந்து வீடு விடாக சென்று மக்களை தெளிவு படுத்தும் வேலைத்திட்டம் செய்யப்படுவதுடன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 7800 வீடுகளில் 3850 வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் 180 வீட்டு உரிமையாளர்கள் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்;.ரீ.நஜீப்கான்தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *