ஒரு சேவைச் செம்மலின் ஈடுபட்ட முடியா இழப்பு ஆதில் பாக்கிர் மாக்கார்

(என்.எம்.அமீன்)
சவூதி அரேபியாவில் தொழில் புரியும் நவமணியின் முன்னாள் செதி ஆசிரியர் யாசீர் லாஹிர் புதனன்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதில் மாக்கார் பற்றிய செதி தெரியுமா என்று கேட்டதும் தொலைபேசி செயலிழந்தது.
ஆதிலுக்கு ஏதோ நடந்திருக்கிறது, அதற்கு 15 நிமிடங்களுக்கு முன் யாசிர் என்னோடு நாட்டநடப்புகள் பேசிவிட்டு மீண்டும் பேசியதிலிருந்து உணர்ந்துகொண்டேன். உடனே முன்னாள் அமைசச்ர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரடன் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டபோது அரவது மகள் பாக்கீர் மாக்கார் ஆதில் இறந்து விட்டார் அங்கிள் என்று பதிலளித்தார்.
ஆதில் பாக்கீர்மாக்கருமடன் குடும்பத்துடன் மூன்று தலைமுறைகளாக நெருங்கிய தொடர்பு கொண்ட என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத ஒரு செதியாக இது இருந்தது.
முன்னாள் சபாநாயகர் மர்ஹும் பாக்கீர் மாக்காரின் மூத்த மகனான இம்தியாஸ் பாக்கீர் மாக்கருக்கு ஐந்து ஆண் பிள்ளைகள் உண்டு. அஸாப்,அஸாம், பாதில், ஆதில், இன்சாப் ஆகியோரே அவர்களாவார்.
ஆதில் அவரது நான்காவது புதல்வராவார். லண்டனில் புகழ்பூத்த என்னனெமிக் ஸ்கூல் என்ற பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் பற்றி பட்டப்பின்படிப்பை மேற்கொள்வதற்காகக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி லண்டன் சென்றார்.
சட்டத்தரணி ஆதிலுக்கு பிரித்ததனிய உயர்ஸ்தானிகராலயம் வழங்கிய ஒரு வருட புலமைப்பரிசிலைப் பெற்றே அவர் லண்டன் சென்றார்.
ஒரு வருடத்தில் ஒரு மாதம் கூட முடிவதற்குள் ஆதிலை இறைவன் இந்த உலகிலிருந்து பிரித்தெடுத்தான்.
கொழும்பு றோயல் கல்லூரி, ஆசியாக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற ஆதில் லண்டன் எல்.எல்.பி. பட்டம் பெற்று இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செது தனது குடும்பத்தில் மூன்றாம் பரம்பரையின் ஒரே சட்டத்தரணியானார்.
படிக்கும் காலத்திலிருந்து தனது தந்தையின் அரசியல் மற்றும் சமூகப்பணிகளுக்கு உதவி வந்த ஆதில் தந்தை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேரடி அரசியலிருந்து ஒதுங்கிய பின் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்கு உறுதுனையாக செயற்பட்டார்.
பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் பாக்கார் நிலையம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பின்னணியிலிருந்து சிறப்பான பங்களிப்பை செதார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவதற்காக பாக்கீர் மாக்கார் நிலையம் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஆற்றிய வருகின்ற பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு தன் அன்பு தந்தைக்கு ஒரு முக்கிய இணைப்பாளராக இவர் பணிபுரிந்தார்.
நல்லாட்சி அரசு பதவியேற்றபின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக அவர் நியமிக்க்பபட்டார். தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதற்பணிப்பாளர் சபையின் தனது தந்தை ஒரு அங்கத்தவரக இருந்தது நினைவுபடுத்திய ஆதில் அதன் வளர்ச்சிக்கு மன்றத் தலைவர் எரங்கவுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை செதார்.
தேசிய இளைஞர் சேவை மன்றம் தலைவர் அவரை தொடர்புகொண்டு இந்த அமைப்புக்கு உங்கள் உதவி கண்டிப்பாக தேவை. உங்களுக்கு சர்வதேச உதவிகள் அதிகமாக இருப்பதால் உங்கள் உதவிக்கு பயனுள்ளதாக அமையும் என்று கூறி சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக நியமித்தார். தனது பணிப்ற்றி தேசிய இளைஞர் சேவை மன்றம் அவருக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் அவரது சேவைக்கு சான்றாக உள்ளது.
ிிதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் என்னைத் தொடர்புகொண்டு தம்பி, இந்த அமைப்புக்கு உங்கள் உதவிகள் கண்டிப்பாகத் தேவை. உங்களுக்கு சர்வதேச உறவுகள் அதிகமாக இருப்பதால் அது எமது இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.
எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் வீணாகிவிடாது அவற்றால் இன்னொருவர் பயனடைவதே முதன்மையாது என்பதற்காக நானும் இளைஞர் பேரவையோடு இணைந்து எனக்குள்ள சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தில் இணைந்துகொண்டேன்.
2014ஆம் ஆண்டு 80 இளைஞர்கள் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளைப் பெற்று சென்றிருந்தாலும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் 8பேரே சென்றிருந்தனர். நான் பொறுப்பேற்றதும் நாம் இந்த வருடம் 78 பேரையாவது வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தலைவர் கூறினார்.
நாம் 26ஆக பிரித்துள்ள ஒரு மாவட்டத்தில் மூவர் விகிதம் 78பேரை வெளிநாட்டுக்கு உயர்கல்விக்காக அனுப்ப தீர்மானித்தோம். 74பேரை அனுப்பியும் வைத்தோம். மிகுதி 4பேரும் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளாலே செல்லவில்லை.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு நாம் மாணவர்களை அனுப்பி வைத்துள்ளோம். கனடாவுடனான மாணவர்கள் மாற்று திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.
சர்வதேச உறவு, ஆங்கில மொழி, தகவல் தொழிநுட்ப அறிவின்றி இன்றைய இளைஞர்கள் முன்னேறுவதென்பது சாத்தியமில்லை. எனக்கும் முதலாவதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதன்காரணமாகவே இன்று நான் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவராக இருக்கின்றேன். ிி

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ரோட்டரி கழகம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்ட இவர் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளராக பணிபுரிவதற்கு முன் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் இரு பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செயப்பட்டார்.
அப்போதைய இளைஞர் விவகார அமைச்சசராக இருந்த டலஸ் அழகப்பெரும இத் தெரிவுபற்றி குறிப்பிட்டபோது,
உங்களுடைய குடும்ப அரசியலையும் பார்க்காது உங்களுக்குள்ள திறமையின் காரணமாகவே உங்களை இத்தூதுக்குழுவிற்கு தெரிவுசெதுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆதில் உயர்கல்விக்காக லண்டன் செல்வதற்கு முன் ஐ.தே.கவின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கட்சி வருடாந்த மாகாநாட்டுக்கான கட்சியைப்பற்றி கட்டுரையொன்று எழுதகப்பட்டிருப்பதாக கேட்டுக்கொள்ளப்பட்டார். இனைளஞர்களாகிய எங்களை மெல்ல வழிகாட்டும் ஐ.தே.கவுக்கு அகவை 70 என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் நாட்டில் மும்மொழி பத்திரிகையிலும் வெளியாகியிருந்தது.

சிறந்த ஆளுமை, ஒழுக்கசீலர், பண்பானவர் என்றும் மற்றவர்களுக்கு உதவும் உயர் குணாம்சங்கள் கொண்ட ஒரு இளைஞராக ஆதில் இனங்காணப்பட்டார். தீவிர சமயப்பற்று கொண்ட ஆதில் தனது பெற்றார் திருமணம் பற்றி பேசும் போது ஏழைக்குடும்பமொன்றிலே நான் திருமணம் செய விரும்புகிறேன். சமயரீதியாக என்னை வழிகாட்டக்கூடிய ஒருவரே தனது துணைவியாக பெற விரும்புகிறேன் என அடிக்கடி கூறுவார். மரணத்தகவலைக் கேள்விபட்டு அங்கு சென்ற போது அவருடை அருமைத் தாயார் பரீதா இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அழுதழுது கூறியுள்ளார்.இது ஆதிலின் சமய ஈடுபாட்டுக்கு சிறந்த சான்றாகும்.
அபாரா திறமைகள் மிக்க நாடும் முஸ்லிம் சமூகமும் பெரு நம்பிக்கைப்பெற்ற ஒரு எதிர்கால தலைவரை சமூகம் மிக இளவயிதில் இழந்துவிட்டது.
ஆதல் தனது 26 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்துச்செல்கிறார். அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைகிக பிரார்த்திப்போமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *