வெடித்துச் சிதறியது ஸ்பேஸ்.எக்ஸ் ; பேஸ்புக் செய்மதியும் அழிவுற்றது

அமெரிக்க ஸ்பேஸ்.எக்ஸ் கம்பனியால் பரீட்சார்த்தமாக ஏவப்படவிருந்தஏவுகணையொன்று வெடித்துச் சிதறியதில் பல மைல் தொலைவு வரையுள்ளகட்டடங்கள் அதிர்ந்துள்ளன.

புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

குறித்த ஏவுகணைக்கு எரிபொருளை ஏற்றிய வேளையிலேயே மேற்படி அனர்த்தம்இடம்பெற்றுள்ளது.

அதேசமயம் இந்த சம்பவத்தில் குறித்த ஏவுகணையால் நாளை விண்வெளிக்கு எடுத்துச்செல்லப்படவிருந்த பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்காக இஸ்ரேலில் 200 மில்லியன்அமெரிக்க டொலருக்கும் அதிகமான செலவில் நிர்மாணிக்கப்பட்ட  அமொஸ் – 6தொடர்பாடல் செய்மதி அழிவடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/cnn/videos/10155249355611509/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *