பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது

ஜாக்கி சான் என்றாலே சண்டைப் பட பிரியர்களுக்கு உடல் முறுக்கேறும்.  திரையுலகில் பொன்விழா காணும் ஜாக்கி சான், நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக     மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர். ஜாக்கி சானுக்கு ழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது நடிகர் ஜாக்கி சானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச் சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை ”THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE” அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

தற்காப்பு கலையை சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்த ஜாக்கிசான் தனது 8 வயது முதல் நடிக்கத்தொடங்கியவர். எழுத்தாளராகவும், இயக்குநராகவும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இதுவரை ஆஸ்கர் விருது பெறாத ஜாக்கி சானுக்கு முதல் முறையாக கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்று போர்ப்ஸ் பத்திரிகை இவரை பட்டியலிட்டிருந்தது.

ஜாக்கிசானின் சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி சான் உடன் மேலும் மூவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எடிட்டர் அன்னி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால்மாஸ்டர் மற்றும் ஆவண திரைப்பட தயாரிப்பாளர் ரெட்ரிக் வைஸ்மேன் மூவரும் கவுரவ ஆஸ்கர் விருதை பெறுகின்றனர். இவர்களுக்கு நவம்பர் 12 தேதி நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *