மாவனல்லை 13 வயது சிறுமி துஷ்பிரயோகம், வெளிச்சத்துக்கு வந்தது.

13 வயது சிறுமியை ஒருவருடமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த 11 சந்தேகநபர்களை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வருடம் மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது குறித்த சிறுமி முதல் முறையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத சிலர் குறித்த சிறுமியை விடுதியொன்றுக்கு அழைத்து சென்று அவருக்கு மது அருந்த செய்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி பின்னர் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற மைதானத்தில் விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மயக்க நிலையில் இருந்த குறித்த சிறுமி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி மதுபோதைக்கு அடிமையாகியிருப்பதை வௌியில் தெரிவிப்பதாக தெரிவித்து , அந்த சிறுமிக்கு பலமுறை மதுபானம் கொடுத்து இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் , கடந்த வருடத்தில் இருந்து இதுவரை அந்த பெண் 11 பேரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் இன்று மாவனெல்லை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அரநாயக்க காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *