மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களே, இது உங்கள் கவனத்திற்கு!!!!

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் பழைய மாணவர்களுக்கு இணையத்தினூடாக (Online) முறை மூலம் தம்மை பதிவுசெய்துகொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவுகளை மேற்கொள்ளும் முறைபற்றி சமூக வளைத்தளங்களில் (Whatsapp, Facebook) பகிரப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக குறுந்தகவல் (SMS) மூலமும் பழைய மாணவர்கள் தம்மைப் பதிவுசெய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் தகவல் திரட்டப்படுவதன் நோக்கம் பாடசாலையுடனான பழைய மாணவர்களின் தொடர்பை மேம்படுத்துவதேயாகும்.
எனவே பதுரியா மத்திய கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தம்மையும் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு அங்கத்தவராக பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

கீழுள்ள WEB Link Click செய்வதன் மூலம் விண்ணப்பங்களை பூரணப்படுத்தலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSftmGtEqZ1CB8e1z31YJM_UKdL19iV2fHal75UTtSIsArWhTQ/viewform?hl=en

-ஆதில் சப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *