தம்புள்ளை கிரிக்கட் மைதான மோதல்

தம்புள்ளை கிரிக்கட் மைதான மோதல்.. கல், பொல்லு தாக்குதலில் 8 போலீசார் வைத்தியசாலையில் அனுமதி.

நேற்று தம்புள்ளையில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா – இலங்கை கிரிக்கட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வாயிலில் இடம்பெற்ற சண்டையில் 8 போலீசார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கல், மற்றும் பொருட்களால் தாக்கபட்ட போலிஸ் அதிகாரிகள் 3 பேர் மற்றும் கான்ஸ்டபிள்கள் 5 பேர் தற்போது தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாத்தளை பிரதான போலிஸ் அதிகாரிகள் இருவரும் இதில் உள்ளடங்குவதாகவும், தாக்குதல் தொடர்பில் இருவர் கைதாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *