ஷகீம் சுலைமான் படுகொலை: மாவனல்லை வரையிலான CCTV கமெராக்கள் சோதனை

பம்பலப்பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் தொழிலதிபர் மொஹமட் ஷகீம் சுலைமானைக் கொன்றவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பிலிருந்து மாவனெல்ல பிரதேசம் வரையுள்ள சீ.சீ.டி.வி கமெராக்களை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக கொழும்பு, பம்பலப்பிட்டிய சனநெரிசல் மிக்க இடங்களிலுள்ள சீ.சீ.டி.வி கமெராக்களில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்திருந்தனர்.

வியாபாரியின் தந்தையிடம் கப்பம் கோரி, கேகாலையிலிருந்து கிடைத்த அலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபரைத் துல்லியமாக அடையாளம் காணுவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் 8 நபர்களிடம் விசாரணை செய்த பொலிஸாருக்கு, அதில் ஒருவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *