உசைன் போல்ட் விளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ!

ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களையும் தான் படித்த பள்ளிக்கு உசைல் போல்ட் அளித்துள்ளார். 

உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான உசைன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

இதன் மூலம் பல கோடி ரூபாய்களையும் உசைன் போல்ட் சம்பாதித்துள்ளார். இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் மூலம் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட 134 கோடி ரூபாய்) தான் படித்த பள்ளிக்கு வழங்கியுள்ளார்.

நிதியில்லை என்று ஜமைக்கா அரசு விளையாட்டுத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று குற்றச்சாட்டப்படும் நிலையில், அந்நாட்டு விளையாட்டுத்துறையை மீட்டெடுக்க தான் படித்த ஃபல்மவுத்தில் உள்ள  “வில்லியம் கினிஃப்” நினைவுப்பள்ளிக்கு நிதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *