இஸ்லாமிய ஆடையுடன் கடற்கரைக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த சோகம்

பிரான்ஸின் நீஸ் பிராந்தியத்தில் கேன்ஸ் நகரில் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிந்து கடற்கரைக்குச் சென்ற 34 வயதான ஒரு முஸ்லிம் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பகிரங்கமாக அவரின் கறுப்பு நிற மேலாடை களையப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அண்மையில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டிகளின் பின் முஸ்லிம் பெண்கள் கடற்கரைகளுக்கு அணிந்து செல்லக் கூடிய புதுவகையான முழு அளவிலான ஆடையும் அறிமுகமாகியுள்ளது. இதற்கு அவுஸ்திரேலியாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விற்பனை 200 விதத்தால் ஓரிரு நாற்களுக்குள் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த புதுவகை கடற்கரை ஆடைக்கு Burkini என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. (பொதுவாக ஐரோப்பிய பெண்கள் கடற்கரைகளில் அணியும் இரண்டு துண்டு ஆடை Bikini என்று அழைக்கப்படுகின்றது) ஆனால் பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பகிரங்க இடங்களில் இஸ்லாமிய முறையிலான ஆடை அணியக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வார முற்பகுதியில் கேன்ஸ் நகர மேயரும் இதற்கு தடை விதித்திருந்தார். இந்நிலையிலேயே இன்று காலை கடற்கரைக்கு இஸ்லாமிய ஆடையுடன் சென்ற பெண்ணுக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது.

அவரை சுற்றி வளைத்த ஆண் பொலிஸார், ஆடையைக் களையாவிட்டால் பெடன் பொல்லால் தாக்கப் போவதாகவும் மிளகு கலந்த நீரை தெளித்து தாக்கப் போவதாகவும் அச்சுறுத்திய நிலையில் வேறு வழியின்றி அந்தப் பெண் பகிரங்கமாக தனது ஆடைகளைக் களைந்தார். பிரான்ஸின் நீதித்துறை இஸ்லாமிய ஆடை தடைக்கு தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *