பி.வி.,சிந்துவிற்கு நயன்தாரா வாழ்த்து

ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவுக்கு அடுத்த பதக்கத்தை உறுதி செய்த பி.வி.,சிந்துவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மின்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார். இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு அடுத்த பதக்கத்தை பி.வி.,சிந்து உறுதி செய்துள்ளார்.
பதக்கத்தை உறுதி செய்துள்ள பி.வி.சிந்துவுக்கு முன்னனி நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், சிந்து மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினர். தங்க மங்கைகள் இந்தியாவிற்காக போராடுகிறார்கள். இது பெண்கள் சக்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *