நேற்று இரவு பரிதாபகரமாக உயிரிழந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள்!

காலி – மாத்தறை வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்துள்ள இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிற்றூந்து ஒன்றை முன்னோக்கி செல்ல முயன்றுள்ளதினால் உந்துருளி கவிழ்ந்து, முன்னால் பயணித்துள்ள பாரவூர்தியுடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், விபத்தினை தொடர்ந்து மூவரும் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள்  உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *