ஒலிம்பிக்கில் இப்படியும் தங்கம் வெல்லாம்:விசித்திரமாக தங்கப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை – Video

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் விஷேட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போட்டியில் நிறைவு செய்யும் இடத்தில் பஹாமாஸ் வீரங்கனை மில்லர் கீழே விழுந்ததன் காரணமாக அந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த மில்லர், ‘நான் கீழே விழுந்து கிடந்த போதும் வெற்றி பெற்றதை அறியவில்லை.

வெற்றி பெரும் நோக்கிலேயே இவ்வாறு முன்னோக்கி பாய்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் இவ்வாறு பாய்ந்தமை காரணமாக அவரின் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் மேலும் ஒரு விஷேட சம்பவமாக கடந்த ஒலிம்பிக்கில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்க வீரங்கனை பீலிக்ஸின் தங்கப் பதக்க கனவு இந்த சம்பவத்தால் பறிபோனது.

அந்த காணொளி கீழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *