10 வயது சிறுமியை மிரட்டி 6 ஆண்டுகள் தொடர் பாலியல் பலாத்காரம்

இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள படோபில் பகுதியை சேர்ந்தவர் கெய்த் டவுனென்டு. இவர் 10 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி பொலிஸில் செய்த முறைப்பாடினை தொடர்ந்து, அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கெய்த்துக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி தினசரி இருமுறை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.

சிறுமி 10 வயதாக இருக்கும் போதே அந்த நபர் தமது கட்டுப்பட்டுக்குள் சிறுமியை கொண்டு வந்துள்ளதாகவும் இது 16 வயது வரை தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறிய இளம் பெண், தமது குழந்தை பருவத்தை அந்த நபர் சூறையாடியதாக கூறிய அவர், தினசரி இருமுறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது வாழ்க்கையின் முக்கிய காலகட்டம் அத்தனையும் நரகத்தில் கழிந்துள்ளதாகவே தாம் தற்போது உணர்வதாகவும், அந்த நபர் சிறையில் இருப்பதால் இனி தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.

வேலை நிமித்தமாக அந்த நபரின் மனைவி பெரும்பாலும் வெளியே சென்று விடுவதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி 10 வயதேயான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தம்மை வலுக்கட்டாயமாக எழுப்பி உறவு வைத்துக்கொள்ள நிர்பந்தித்துள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 3000 முறை தம்மை அவர் பலாத்காரம் செய்திருப்பார் எனவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த கொடுமைகள் பலவும் வெளியே சொல்ல முடியாதது எனவும், அந்த நினைவுகளில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *