கண்டி பெரஹராவின் போது மூன்று பெண்களுக்கு நடந்த விபரீதம்!

கண்டி பெரஹராவின் போது மூன்று பெண்களுக்கு நடந்த விபரீதம்! – Hiru News – Srilanka’s Number One News Portal, Most visited website in Sri Lanka

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற பெரஹராவின் போது, அதனை பார்வையிட வந்திருந்தவர்களில் மூன்று பெண்கள் மீது கண்ணாடி யன்னல் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது காயமடைந்த அவர்கள் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பெரஹராவை கொழும்பு வீதியில் இருந்து பார்வையிடும் போது, அவர்கள் அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்த கண்ணாடி யன்னல் உடைந்து வீழ்ந்துள்ளதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதுடன், மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருவதாக கண்டி மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *