“இறைவா! இந்த Exam Time ல எனக்கு என்னமாலும் சுகமில்லாது போகாணும் – உண்மை சம்பவம்

நேற்றைய தினம் நான் எதிர்கொண்ட மிகப்பெரும் சவால் இப்பொழுது நினைத்தாலும் வலிக்கிறது.
நடைபெற்றுக் கொண்டுள்ள உயர்தர பரீட்சைக்காய் தோற்றும் சில தங்கைமார் என்னிடம் அரசியல் விஞ்ஞானம் படித்துத் தர சொல்லி வந்திருந்தார்கள். காலையிலிருந்து இரவு 07.00மணி வரை அவர்களுக்கு பாடம் நடத்தினேன்.

அந்தத் தங்கைமார் மனம்சோர்ந்து ஒருவித விருப்பமின்மையோடு பரீட்சைக்குத் தயாராகும் நிலை நன்கு புலப்பட்டது. நான் அவர்களுக்கு கொடுத்த பிரயத்தனத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காலையிலிருந்து படித்துக் கொடுத்தும் நான் சோர்வுற்று போகா நிலையில் அவர்களின் முகங்கள் வாடிப் போயிருந்தன.

அப்பொழுது ஒரு சகோதரி “இறைவா! இந்த Exam Time ல எனக்கு என்னமாலும் சுகமில்லாது போய் Hospital இல் அட்மிட் ஆவினால் எப்படி Happy ஆ இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஒருவித பயமே தொற்றிக் கொண்டது. இரண்டு வருடம் படித்துவிட்டு இப்படியா பேசுவது என்றேன். “படித்தே இல்லையே” என்றார் சிரிப்புடன். இது விளையாட்டு விடயமல்ல என்று நான் கொஞ்சம் கடுமையாக சொன்னதும், “இல்ல தாத்தி, எங்க Teacher எதுவும் படித்துத் தந்தில்ல, எங்களுக்கு ஒன்றுமே தெரியாது, வெறும் Notes ஐ மட்டும் தந்துவிட்டு படித்துக்கொள்ளுங்கள் என்றால் நாங்கள் என்ன மேதையா? அதிலும் பல பொய்யான விடயங்கள், அவக்கு ஒன்டுமே தெரியாது. Doubt ஒன்று கேட்டாலும் தேடிப் படிக்க வேண்டும் என்று திட்டுவார்கள்.

ஆரம்பத்தில் political என்றால் நல்ல விருப்பம், இப்போ இதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கு. நடைமுறை அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம், Exam செஞ்சி Fail ஆவி போரத விட, செய்யாமல் இருக்குறது Better இல்லயா?” என்றார். எனக்கு நெஞ்சில் வந்து அடைத்தது போல் உணர்வு.
அந்த பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ளாமல், “இப்படி எல்லாம் Think பண்ண Political Science கஷ்டம் இல்லயே? நான் என்னால் முடியுமானவரை படித்துத் தருவேன். இப்ப Try பண்ணினாலும் Pass பண்ணிடலாம், பயப்படாமல் Exam Face பண்ணுங்க,” என்றேன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு. “Start ல இருந்தே உங்ககிட்ட வந்திருந்தா இப்போ இப்படி Worry பண்ண மாட்டோம்” என்றார்கள். நான் 05.00மணியோடு முடிக்க இருந்த வகுப்பை இரவு 07.00மணி வரை நடாத்திவிட்டு 13ஆம் திகதி பரீட்சைக்கு செல்லும் வரை தொடர்ந்து வாருங்கள் என வழியனுப்பி வைத்தேன்.

அப் பிள்ளைகள் ஓரளவு திருப்தியுடன் விடைபெற்றுச் சென்றாலும் குறித்த ஆசிரியர் மீது எனக்குள்ள கோவம் இன்னும் ஓயவில்லை, இந்த தங்கைமார் பரீட்சையே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆசிரியர் அலட்சியமாக இருந்திருப்பின் இப் பிள்ளைகள் ஒவ்வொருவரினதும் நாளைய எதிர்காலத்துக்கு குறித்த ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
படித்துக் கொடுப்பது மிகப்பெரும் விடயம். அதில் பொய் எல்லாம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும் இருக்கின்றமை கவலையே. சம்பளத்துக்கு உழைக்கும் ஆசிரியர்கள் தான் எடுக்கும் பணத்தை ஹலாலாக (ஆகுமாகபட்ட விதத்தில்) அமைத்துக் கொள்ள தன்னை நாடி வரும் பிள்ளைச் செல்வங்களை, தன் பிள்ளைகளாக மதித்து, அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

நாளைய நல் அறிஞர்களையும், புத்திஜீவிகளையும் உருவாக்கும் தலையாய பொறுப்பை தலை சுமந்த ஆசிரியர்கள் தங்கள் விடயத்தில் அலட்சியமாக இருந்தால் நாளைய உலகம் யாரை சுமக்கப் போகுமோ???

Aathifa Ashraf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *