கடந்த காலங்களில் இலங்கையால் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் வெற்றியளிக்கவில்லை

கடந்த காலங்களில் இலங்கையால் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்த வர்த்தக இலக்குகள் வெற்றியளிக்கவில்லை என பொது முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் நடைபெறும் 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் உரையாற்றும் போது அமைச்சர் இந்த விடயத்தை தௌிவுபடுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்துடனான உறவினை பேணும் பொருட்டு இலங்கை உற்பத்திகளின் தீர்வையற்ற ஏற்றுமதிகள் தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாட்டையும் அமைச்சர் இங்கு தௌிவூட்டினார்.

“பிராந்திய கூட்டுறவில் தனியார் துறையின் பங்களிப்பு ” எனிம் தலைப்பில் 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் ஆராயப்பட்டுள்ளது.

நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்பாடுகளில் நம்பிக்கையை கட்டியெழுப்புதலின் முக்கியத்துவத்தையும் தனியார் துறையின் முக்கியத்துவத்தையும் இங்கு அமைச்சர் கபீர் ஹசீம் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை மற்றும் பிராந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் வலுப்பெறுவதாக அமைச்சரை மேற்கோளிட்டு பிரதமர் அலுவலகம் செய்தி வௌியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *